வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடைசி ஞாயிறு முன்னிட்டு சிம்ம குளம் திறப்பு நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது சாமி தரிசனம் செய்ய இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது இதன் முக்கிய நிகழ்ச்சியாக 12ஆம் தேதி நள்ளிரவில் சிம்ம குளம் திறக்கும் நிகழ்ச்சி, சூரிய தீர்த்தம் ,பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் தீர்த்தங்களில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் நீர்வழி கோவிலில் கோவில் சாமி முன் படுத்து உறங்கி ஆண்டுதோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கம், திருவிழாவையொட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி , வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி 12&13 தேதிகளில் இந்தத் திருவிழாக்களில் பொது தரிசனம் செய்த இணைய வழியில் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
தரிசனம் செய்ய விரும்புவோர் http://www.virinjipuramsivantemple.com/ என்ற இணையதளம் முகவரியில் முன்பதிவு செய்யலாம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 1 மணி நேரத்திற்கு 180 பக்தர்கள் என ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேர் மட்டுமே காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவர்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய் பழம் பூக்கள் ஆகியவை எடுத்து வர அனுமதி இல்லை, கோவிலில் தீர்த்தம் விபூதி குங்குமம் போன்ற எவ்வித பிரசாதங்களும் வழங்கப்படாது.