‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தெலுங்கு டீசர் நாளை வெளியாகிறது!!!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் ‘மாஸ்டர்’. ஆக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்த இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் எக்ஸ்.பி.பிலிம்ஸ் பேனரின் கீழ் ஷேவியர் ப்ரிட்டோ ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Praveen Praveen

இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, நாசர், ரம்யா சுப்ரமணியம், தீனா, சஞ்சீவ், மாஸ்டர் மகேந்திரன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறையில் வெளியாக இருக்கிறது. இதே போல மாஸ்டர் திரைப்படத்தின் டிரெய்லர் நியூ இயர் அன்று வெளியாக இருக்கிறது.

மாஸ்டர் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று மற்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதன் தமிழ் டீசர் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது