சென்சார் இல்லை என்பதால் நடப்பதை தன் இஷ்டத்திற்கு காட்சிகளாக்கி வெளிச்சத்தில் OTTயில் வெளியிடும் இளம் இயக்குனர் ரஞ்சித் இவர்தான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனியாக உள்ள நிவாஸ் ரிசார்ட் “த்ரீசன்” என்ற வெப்சீரிஸ் படப்பிடிப்பை நடத்தி வந்தார்.
ரஞ்சித் அவரது இணையதள தொடரில் நடிக்க சென்னை விருகம்பாக்கத்தில் சேர்ந்த 22 வயதான இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார், ரஞ்சித்துடன் உதவியாளர்களாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி நடிப்பு சொல்லிக் கொடுப்பதாக கூறி அடைத்து வைத்து இளம் இயக்குனர் ரஞ்சித் அவருடைய உதவியாளர்கள் கார்த்திக், ரியாஸ் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நடிகையை பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இயக்குனர் ரஞ்சித் மற்றும் உதவியாளர்கள் கார்த்திக், ரியாஸ் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு நடிகர் ரஞ்சித் மற்றும் உதவியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது அந்த நடிகையியுடன் கடந்த ஒரு மாதமாக LIVIN இருந்துள்ளேன் திடீரென நடிகை மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் தாங்கிக் கொள்ள முடியாமல் ரஞ்சித் நடிகையை தாக்கியது தெரியவந்தது.
லிவிங் டு கெதர் வாழ்க்கை குறித்து போலீசார் கேட்டபோது அப்படி ஒரு வாழ்க்கையை வாழவில்லை என்றும் தன்னை காதலிப்பதாக கூறி ரஞ்சித் தன்னை அடைத்து வைத்து கண்மூடித்தனமாக அடித்து உதைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ரஞ்சித் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவதாக கொரோன பரிசோதனை நடத்திய பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், ரஞ்சித்தின் உதவியாளர்கள் கார்த்திக், ரியாஸ் இருவருக்கும் அதில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என தெரியவந்ததால் இருவரையும் விடுவித்தனர்.