காட்பாடியில் 16.45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் 16.45 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. நவீன வசதிகளோடு கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நீச்சல் குளங்களில் டைல்ஸ் ஒட்டுவது, இரவு நேரங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு உயர் கோபுர மின் விளக்குகளை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Praveen

கிட்டத்தட்ட 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வரும் ஜனவரி மாதம் முதல் மாவட்ட விளையாட்டு மைதானம் செயல்படுவதற்கு தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.