நெஞ்சுவலியால் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி-குணமடைந்து வருவதாக தகவல்?

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சௌரவ் கங்குலி குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Praveen Praveen

கொல்கத்தாவில் உள்ள ஜிம்மில் பயிற்சி செய்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது உடனடியாக அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவரது உடல்நிலை சிறப்பாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது இதனிடையே கங்குலி நலம் பெற வேண்டி ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கங்குலி படம் மணல் சிற்பம் வடிவமைத்துள்ளார்