குடியாத்தத்தில் 15 பெண்களை வைத்து போலியாக இயங்கி வந்த கால் சென்டர்?

குடியாத்தத்தில் 15 பெண்களை வைத்து போலியாக இயங்கி வந்த கால் சென்டர் பல மாதங்களாக பொதுமக்களை ஏமாற்றி செல்போன் மற்றும் சார்ஜர்களில் களிமண்களை வைத்து பொருட்கள் விற்று  வந்தது அம்பலம்.

Praveen Praveen

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்ட சுப்பிபையா தெருவில் எந்த ஒரு விளம்பரமும் இன்றி ஒரு வீட்டில் பெண்கள் அதிகம் வேலை செய்வதாக குடியாத்தம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

இதை தொடர்ந்து உள்ளூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தொடர்ந்து போலியாக பொருட்கள் விற்பனை செய்வதாக குடியாத்தம் காவல்துறை எடுத்து வந்த புகாரின் அடிப்படையில் பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரில் அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் 15 பெண்கள் எந்த ஒரு விளம்பரமும் இன்றி வேலை செய்து வந்தது தெரியவந்தது

அந்த பெண்களிடம் குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உங்களுக்கு பரிசு விழுந்துள்ளதாகவும் தாங்கள் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் Charger களை பாதி விலைக்கு தருவதாகவும் கூறி பொதுமக்களை ஏமாற்றி செல்போன் நிறுவனங்களின் பெயர்களிலும் Power Bankல் களிமண்ணை வைத்து பொதுமக்களுக்கு தபால் மூலம் அனுப்பி ஏமாற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது.

பின்னர் அங்கு பணியில் இருந்த பெண்களை தகவல் தெரிவித்து பின்னர் அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்த செல்போன் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர் உரிமையாளர் திருப்பத்தூர் மாவட்டம் மாதனுர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற வேலாயுதம் என்பது தெரியவந்ததை தொடர்ந்து குடியாத்தம் போலீசார் மாதனூர் விரைந்தனர்.