பறவை காய்ச்சல் எதிரொலி ? பாதிப்படையாத மாநிலங்கள் எச்சரிக்கை

கறிக் கோழி முட்டை போன்றவற்றை உண்பதால் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Praveen Praveen

கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலும் விலங்குகள் நல துறை பறவை காய்ச்சல் பரவுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது இதுவரை பாதிப்படையாத மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன பண்ணைக் கோழிகள் மற்றும் முட்டைகளில் பாதுகாப்பு குறித்தும் அவற்றை வேக வைத்து சமைத்து உண்பது பாதுகாப்பானது என்பது குறித்தும் விழிப்புணர்வை அதிகரிக்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது