விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ள காலிஸ்தான்?

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனர் என்பதற்கு மத்திய அரசு 13 ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Praveen Praveen

இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றபோது போராட்டக்களத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவல் உண்மைதானா என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் போராட்ட களத்தில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினரும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் விவசாயிகள் போராட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளார்களா என்பதை தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்