காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தையை கத்தியால் குத்தி கொலை?

கோவையில் ஒரு தலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இளைஞரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Praveen Praveen

கோவை குமாரபாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்படி பெண்ணின் வீட்டுக்கு சென்று இளைஞர் பேசியுள்ளார்.

இதற்கு மறுத்து விட்ட பெண்ணின் தந்தை அவருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்ணின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக சொல்லப்படுகிறது பின்னர் அந்த இளைஞரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்