அனுமன் ஜெயந்தியையொட்டி சுமார் 2 லட்சம் லட்டுகள்?

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக சுமார் 2 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Praveen Praveen

அங்குள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக சுமார் 2 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

அனுமன் ஜெயந்தியையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் துடியலூர் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளில் உள்ள குபேர ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம். ஆஞ்சநேயர் சிறப்பு அலங்கார பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்ற பின் பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர், இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.