சசிகலாவை வருக வருக என காட்பாடி பகுதிகளில் போஸ்டர்கள்?

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவை வருக வருக என காட்பாடி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு.

Praveen

தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் அதிக அளவு வரவேற்கும் விதமாக, எங்கள் கழகப் பொதுச்செயலாளர் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வேலூர் மாநகர மாவட்ட காட்பாடி கிழக்கு ஒன்றிய காட்பாடி தொகுதியில் அதிமுக ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் சரத்குமார் அதிமுகவின் பொதுச் செயலாளர் எங்கள் கழக பொதுச்செயலாளர் வருக வருக என போஸ்டர் மூலம் வேலூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது.

இதனால் வேலூர் காட்பாடி ஆகிய இரு பகுதியில் அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அடுத்தடுத்து சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்ட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன