இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Praveen

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவரும் சூழலில் இருபத்து நான்கு மணி நேரம் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விபரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 879 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதே சமயம் ஒரே நாளில் 97 ஆயிரத்து 168 பேர் குணமடைந்துள்ளனர், நாடு முழுவதும் 12 லட்சத்து 64 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 10 கோடியே 85 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.