Chittoor District 10 Important Facts & Information

Chittoor District 10 Important Facts & Information

  • சித்தூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும், மாவட்ட தலைமையகம் சித்தூர்.
  • சித்தூர் மாவட்டத்தில் மாம்பழம் ,தானியங்கள், கரும்பு மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முக்கிய சந்தை மையமாக உள்ளது, ஏப்ரல் 4 2022 முதல் சித்தூர் மாவட்டம் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • திருப்பதி மாவட்டம், அன்னமய்யா மாவட்டம், சித்தூர் மாவட்டம், பரப்பளவு 2647 சதுர மைல்கள் ஆகும், பிரிக்கப்பட்டதற்கு பிறகு மாவட்டத்தில் 18 லட்சத்து 72,951 மக்கள் தொகை கொண்டுள்ளது.
  • அதில் 19% பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர் ,இங்கு ஆயிரம் ஆண்களுக்கு 993 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது, மக்கள் தொகையில் பட்டியல் சாதிகள் 21 சதவீதம் 2% பேர் பழங்குடியினர்.
  • இங்கு 73 சதவீதம் பேர் தெலுங்கையும்,16 சதவீதம் பேர் தமிழையும், 8% உருது மொழியும் முதல் மொழியாக பேசுகின்றனர்.
  • இம் மாவட்டத்தின் முதன்மை அலுவல் மொழியாக ஆங்கிலத்துடன் தெலுங்கு உள்ளது, எல்லைப் பகுதியில் குறிப்பாக குப்பத்தில் தமிழ் அதிகம் பேசப்படுகிறது.
  • இந் மாவட்டத்தில் நகரி, சித்தூர், பலமனேரி மற்றும் குப்பம் என நான்கு வருவாய் கோட்டங்கள் உள்ளன, இந்த நான்கு வருவாய் கோட்டங்களின் கீழ் 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • சித்தூர் மாநகராட்சியாகவும், நான்கு நகராட்சிகளும் உள்ளன, இம்மாட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளும் ஏழு சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.
  • மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 34 ஆயிரத்து 742 கோடி இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதம் பங்களிக்கிறது.
Exit mobile version