Konaseema district Facts & Information

Konaseema district Facts & Information

  • கோணசீமா மாவட்டம் அதிகாரப்பூர்வமாக டாக்டர் பி ஆர் அம்பேத்கார் கோணசீமா மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோணசீமா பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றின் கிளைமேடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
  • 4 ஏப்ரல் 2022 ஆந்திர பிரதேச அரசால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து கோணசீமா மாவட்டம் பிரிக்கப்பட்டது, இதன் தலைமையகமாக அமலாபுரம் உள்ளது அதேபோல் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகவும் அமலாபுரம் திகழ்கிறது.
  • மாவட்டத்தில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க நகரங்கள் மண்டபேட்டா, ராமச்சந்திரபுரம் மற்றும் மும்மிடிவரம் ஆகும்.
  • கோணசீமா மாவட்டத்தில் முக்கிய பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது, இதன் முதன்மையான உற்பத்தி அரிசி.
  • அமலாபுரம் வருவாய் கோட்டங்களில் 10 மண்டலங்களும் கொத்துப்பேட்டை வருவாய் கோட்டத்தில் ஏழு மண்டலங்களும் மற்றும் ராமச்சந்திராபுரம் வருவாய் கோட்டங்களில் 5 மண்டலங்களும் உள்ளன.அதே போல் வருவாய் பிரிவுகளின் கீழ் 22 மண்டலங்கள்.
  • இதன் மொத்த பரப்பளவு 803 சதுர மைல் ஆகும், இதில் ஒரு நாடாளுமன்றம் மற்றும் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
  • 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி கோணசீமா மாவட்டத்தில் 1,719,093 மக்கள் தொகையை கொண்டுள்ளது, அதில் 9.56% பேர் நகரங்களில் வாழ்கின்றனர்.
  • கோணசீமா மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 994 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது.
  • அதில் (Schedule Caste) பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் 24 சதவீதம் மற்றும் 0.78 சதவீதம் கொண்டுள்ளது.
  • 99.11% மக்கள் பேசும் மொழியாக தெலுங்கு உள்ளது
Exit mobile version