Prakasam District 10 Important Facts & Information

Prakasam District 10 Important Facts & Information

  • பிரகாசம் மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச கடலோர பகுதி மாவட்டம் ஆகும் 1970 இல் உருவாக்கப்பட்டது.
  • அதன் பிறகு 4ஏப்ரல் 2022 அன்று மறுசீரமைக்கப்பட்டது. மாவட்டத்தின் தலைமையகம் ஓங்கோல் ஆகும். இது வங்காள விரிகுடாவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
  • ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சரான டங்குடுரி பிரகாசம் அவர்களின் நினைவாக இம் மாவட்டம் பெயரிடப்பட்டது,அதன்படி 1972 ஆம் ஆண்டு பிரகாசம் மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டது.
  • இம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5530 சதுர மைல்கள் ஆகும், மாவட்டத்தை பிரிக்கப்பட்ட பிறகு மக்கள் தொகை 22 லட்சத்து 88 ஆயிரத்து இருவத்தி ஆறு ஆகும்.
  • அதில் 19 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்,  ஆயிரம் ஆண்களுக்கு 971 பெண்கள் என பாலின விகிதம் உள்ளது.
  • பட்டியல் சாதிகள் 23 சதவீதமும் பழங்குடியினர் மூன்று சதவீதம் உள்ளனர், இம் மாவட்டத்தில் 93.88% மக்கள்  தெலுங்கையும், 5 சதவீதம் உருது மொழியையும் முதல் மொழியாகப் பேசுகின்றனர்.
  • இம் மாவட்டத்தின் பிரிக்கப்படாத மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 35 ஆயிரத்து 962 கோடி ரூபாய், இம் மாவட்டம் மாநிலத்தில் கணக்கிடப்படும் பொழுது 6.9 சதவீதமாக உள்ளது.
  • பிரகாசம் மாவட்டத்தில் புகையிலை, மிளகாய், பட்டாவியா,பால், இறைச்சி மற்றும் மீன் வளம் மற்றும் விவசாயம், கட்டுமானம், கனிம வளங்கள் ஆகியவற்றே பங்களிக்கிறது.
Exit mobile version