Red Sandalwood in Andhra Pradesh?

Red Sandalwood in Andhra Pradesh-ஆந்திராவின் பிரபலமான சேஷாசலம் மலைகளின் சிறப்புகள்?

தென்கிழக்கு இந்தியாவின் தெற்கு ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாகும்,சேஷாசலம் மலைத்தொடர்கள் முக்கியமாக ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராயலசீமாப் பகுதியில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் உள்ளன.

இம்மலைகளில் உள்ள தாதுக்கள் மணல்கள் மற்றும் சுண்ணாம்புக்கள், திருப்பதி ஒரு முக்கிய இந்து புனித யாத்திரை நகரம் மலைகளில் அமைந்துள்ளது, சேஷாசலம் மலைகளில் அஞ்சனாத்திரி, கருடா திரி, நாராயணாத்ரி, நீலாத்திரி, சேஷாத்திரி, வெங்கடாதிரி மற்றும் விருஷபத்ரி ஆகிய ஏழு சிகரங்கள் உள்ளன.

இவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் உள்ளன, இந்த ஏழு சிகரங்களும் இந்து புராணங்களில் பாம்புகளின் ராஜாவான  ஆதிசேசனின் ஏழு பேட்டைகளில் குறிக்கின்றன.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவும் இந்த எல்லைகளில் அமைந்துள்ளது, சேஷாசலம் மலைத்தொடர் வடமேற்கு முதல் தென்கிழக்கு வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளமும் 32 முதல் 40 கிலோமீட்டர் வரை அகலம் கொண்டுள்ள சேஷாசலம் மலை தொடர் ராயல் சீமா மாவட்டங்களான திருப்பதி மற்றும் கடப்பாவில் உள்ளது.

2010இல் Biosphere உயிர்க்கோள காப்பகமாக நியமிக்கப்பட்டது, இதில் மருந்துகள், சோப்புகள், ஆன்மீக சடங்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் சிவப்பு சந்தன கட்டைகள் பெரிய இருப்புகளை சேஷாசலம் மலைகள் கொண்டுள்ளது.

Exit mobile version