Andhra Pradesh State Facts & Information ஆந்திர பிரதேசம் உத்தராந்திரா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகிய மூன்று பிராந்தியங்களில் 26 மாவட்டங்களை கொண்டுள்ளது.
உத்தராந்திராவில் ஸ்ரீகாக்குளம் ,விஜயநகரம், பார்வதிபுரம் மானியம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜ், விசாகப்பட்டினம் மற்றும் அகனப்பள்ளி மாவட்டங்களை கொண்டுள்ளது.
கடலோர ஆந்திராவில் காக்கிநாடா, டாக்டர் பி ஆர் அம்பேத்கார் கோனசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, எலுரு,கிருஷ்ணா, என் டி ஆர், குண்டூர், பல்நாடு, பாபட்லா, பிரகாசம், எஸ்பிஎஸ்ஆர் நெல்லூர் மாவட்டங்கள் உள்ளன.
ராயலசீமாவில் கர்னூல், நந்தியால், அனந்தபூர், ஸ்ரீ சத்ய சாய், ஒய்எஸ்ஆர், அன்னமய்யா, திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்கள் உள்ளன.
பரப்பளவில் பிரகாசம் மிகப்பெரிய மாவட்டம் 14,322 ஸ்கொயர் கிலோமீட்டர், விசாகப்பட்டினம் சிறியது1048 ஸ்கொயர் கிலோமீட்டர் , நெல்லூரில் 24 லட்சத்து 69 ஆயிரத்து 712 அதிக மக்கள் தொகை கொண்டுள்ள மாவட்டம், பார்வதிபுரம் மாவட்டத்தில் 9 லட்சத்து 25 ஆயிரத்து 340 மக்கள் தொகையும் கொண்டுள்ள குறைந்த மக்கள் தொகை மாவட்டம்.
மாவட்டங்கள் நிர்வாக நோக்கங்களுக்காக வருவாய் மண்டலங்களாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.