Jewel Of East Coast Facts?

Jewel Of East Coast? விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறப்புகளும் அதன் வரலாறும்?

விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.

இது கிழக்கு தொடர்ச்சி மலைக்கும், வங்காள விரிகுடாவின் கடற்கரைக்கும் இடையில் உள்ளது, இந்தியாவின் சென்னைக்கு பிறகு இரண்டாவது பெரிய நகரமாகவும் தென்னிந்தியாவில் நான்காவது பெரிய நகரமாக உள்ளது.

விசாகப்பட்டினம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேசத்தில் உள்ள நான்கு ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் விசாகப்பட்டினம் நகரம் ஒன்றாகும்.

ஒரு வருடத்திற்கு 43.5 பில்லியன் டாலர் உற்பத்தியுடன் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியில் ஒன்பதாவது பெரிய பங்காளிப்பாளராக உள்ளது, இந்நகரம் தென்கடற்கரை ரயில்வே மண்டலத்தில் தலைமையகமாகவும் இந்நகரம் பழமையான கப்பல் கட்டும் தளம் மற்றும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரே இயற்கை துறைமுகத்திற்கும் சொந்தமானது.

மேலும் விசாகப்பட்டினம் துறைமுகம் இந்தியாவின் ஐந்தாவது பரபரப்பான சரக்கு துறைமுகம் ஆகும், இந்த நகரம் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும், அதன் கடற்கரைகள், பண்டைய பௌத்த தலங்கள், கிழக்கு தொடர்ச்சி மலைகள் என இயற்கை சூழலுக்காகவும் அறியப்படுகிறது.

இதனை “City of Destiny” விதி நகரம் என்றும் மேலும் “Jewel Of East Coast” கிழக்கு கடற்கரையின் நகை என்றும் செல்ல பெயருடன் அழைக்கப்படுகிறது.

2020 இல் 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்தியாவின் ஒன்பதாவது தூய்மையான நகரமாக பட்டியலிடப்பட்டது, 2020 ஆம் ஆண்டில் உலக ஸ்மார்ட் சிட்டி பிரிவுகளில் லிவிங் மற்றும் உள்ளடக்கிய பிரிவில் இறுதிப் போட்டியில் இருந்தது.

Exit mobile version