Srikakulam District Facts & Information ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் சிறப்புகள்?
ஸ்ரீகாகுளம் மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும் இந்த மாநிலத்தில் உத்தரந்திரா பகுதியில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் அமைந்துள்ளது. அதன் தலைமையகம் ஸ்ரீகாக்குளத்தில் அமைந்துள்ளது.
வடகிழக்கு திசையில் அமைந்துள்ள ஆறு மாவட்டங்களில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் ஒன்றாகும், இதற்கு முன் இதனை சிகாகோல் என்று அழைக்கப்பட்டது.
1936 ஏப்ரல் 1 வரை கஞ்சம் மாவட்டத்தின் கீழ் இருந்தது, பின்னர் விசாகப்பட்டம் மாவட்டத்திற்கு இணைக்கப்பட்டது,இது ஒரு காலத்தில் பண்டைய கலிங்கத்தின் பகுதியாக இருந்தது.
ஸ்ரீகா குளத்தில் மூன்று வருவாய் பிரிவுகளும், முப்பது மண்டலங்களும், 1802 கிராமங்களும், 12 டவுன்களையும் கொண்டுள்ளது, அதன் மக்கள் தொகை 2,191,437.
அதனுடைய பரப்பளவு 4591 சதுர கிலோமீட்டர் ஆகும், அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு ஆகும்.இதில் இரண்டு MP தொகுதிகளும் , 8 எம்எல்ஏ தொகுதிகளும் அடங்கி உள்ளது.