Longest River In Tamilnadu? -தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு (Longest) எது? எங்கு உருவாகிறது?
தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு காவிரி ஆகும், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பாயும் முக்கிய இந்திய நதிகளில் ஒன்றாகும் காவிரி ஆறு.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரம்மகிரி மாவட்ட மலைத்தொடரில் உள்ள தலகாவேரியில் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 1341 மீட்டர் உயரத்தில் எழுகிறது.
வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன் சுமார் 800 கிலோ மீட்டர் பாய்கிறது, இது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் கலக்கிறது, இந்த நதி மாநிலத்தை வடக்கு மற்றும் தெற்காக பிரிக்கிறது பண்டைய காலத்தில் இந்த நதியை பொன்னி நதி என்றும் அழைக்கப்பட்டது.
இது தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய நதியாகும் முதலாவது கோதாவரி இரண்டாவது கிருஷ்ணா நதிக்கு பிறகு தமிழ்நாட்டின் மிக நீளமான நதி காவேரி ஆகும்.
அதேபோல் தென்னிந்திய மக்களுக்கு காவிரி நதி காவிரித்தாய் எனவும் காவேரி அம்மா என வணங்கப்பட்டு வருகிறது அதே போல் இந்தியாவின் ஏழு புதிய புனித நதிகளில் ஒன்றாகவும் காவேரி உள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் விவசாயத்தின் அத்தியாவசியம் காவிரி நதியாகும் காவேரி படுகையில் நீர் பிடிப்பு பகுதி சுமார் 81 ஆயிரத்து 155 சதுர கிலோமீட்டர் ஆகும்.
இதில் ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, பவானி, லட்சுமண தீர்த்தா, நொய்யல் மற்றும் அர்காவதி என பல துணை நதிகளும் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் 43,868 சதுர கிலோமீட்டர், கர்நாடகாவில் 34,273 சதுர கிலோ மீட்டர்களும், கேரளாவில் 20086 சதுர கிலோமீட்டர் மற்றும் புதுச்சேரியில் 148 சதுர கிலோ மீட்டர்களும் காவேரி படுகையை கொண்டுள்ளது.
காவிரி நதி விவசாய ஆதாயமாகக் கொண்டு டெல்டா பகுதிகள் விவசாயத்தை நடத்தி வருகிறது, பல வருடங்களாக கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் காவிரி நதி நீர் பிரச்சனை இருந்து கொண்டே வருகிறது