Paruvanilai – Geography of Tamilnadu

தமிழ்நாட்டின் காலநிலை மாற்றம் & அமைப்பு?- Paruvanilai – Geography of Tamilnadu

தமிழ்நாடு இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலம் ஆகும் சுமார் 130,058 சதுர கிலோமீட்டர் அதாவது 50216 சதுர மைல் பரப்பளவை கொண்டுள்ள மாநிலம் ஆகும், இதனுடைய மேற்கில் கேரளாவும், வடமேற்கில் கர்நாடகாவும், வடக்கே ஆந்திராவும், கிழக்கே வங்காள விரிகுடா மற்றும் தெற்கே இந்திய பெருங்கடலின் எல்லையாக உள்ளது.

இந்தியாவிலேயே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை தொடர்கள் இரண்டையும் நீலகிரி மலையில் சந்திக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

மேற்கு தொடர்ச்சி மலைகள் கேரளாவின் மேற்கு எல்லை முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றன தென்மேற்கு பருவ மழையை தாங்கும் மேகங்கள் மாநிலத்திற்கும் நுழைவதை தடுக்கின்றன, கிழக்குப் பகுதியில் வளமான கடலோர சமவெளியாகும், வடக்கு பகுதிகள் மலைகள் மற்றும் சமவெளிகளின் கலவையாகும், மத்திய மற்றும் தென் பகுதிகள் வரண்ட சமவெளி ஆகும்.

தமிழ்நாடு சுமார் 1076 கிலோ மீட்டர் அதாவது 700 மைல் கடற்கரையை கொண்டுள்ளது, இது குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு பிறகு நாட்டின் மூன்றாவது மிக நீளமான கடற்கரையாகும்.

2004 இல் இந்திய பெருங்கடல் சுனாமி இந்தியாவை தாக்கிய போது தமிழ்நாட்டு  சுமார் 7793 நேரடி இறப்புகளை ஏற்படுத்தியது, தமிழ்நாடு பெரும்பாலும் பருவ மழையை பெரிதும் நம்பியுள்ளது பருவ மழை பொழித்தால் வறட்சி ஏற்படும்.

இந்த மாநிலத்தின் இயல்பான வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 945 மில்லி மீட்டர் ஆகும், இதில் 48 சதவீதம் வடகிழக்கு பருவமழை மூலமாகவும்,32 சதவீதம் தென்மேற்கு பருவமழை மூலமாக உள்ளது.

தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை மறு உருவாக்க மழை நீரையே நம்பியுள்ளதால் நீர் பற்றாக்குறை கடுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

Exit mobile version