Vizianagaram District Facts & Information? விஜயநகரம் மாவட்டம் சிறப்புகளும் அதன் அம்சங்களும்?
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தின் உத்தராந்திரா பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும், அதன் தலைமையகம் விஜய நகரத்தில் அமைந்துள்ளது.
இம்மாவட்டம் ஒரு காலத்தில் பண்டைய கலிங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இந்த மாவட்டத்தில் சாரிப்பில்லி திப்பிலிங்கேஸ்வரா கோவில், ஜெயதி மல்லிகார்ஜுனா கோவில் ஆகியவை கிழக்கு கங்கா வம்சத்தினரால் இம்மாட்டத்தில் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு சிறந்து எடுத்துக்காட்டாகும்.
மாவட்டத்தின் கிழக்கே ஸ்ரீகாகுளம், வடக்கே பார்வதிபுரம், தெற்கில் விசாகப்பட்டினம், தென்கிழக்கே வங்காள விரிகிடவும், மேற்கே அல்லூரி சீதாராம ராஜு மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.
மாவட்டம் ஜூன் 1, 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, அண்டை மாவட்டங்களான ஸ்ரீகாக்குளம் மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
மாவட்டத்திற்கு விஜயநகரம் சமஸ்தானத்தின் பெயரிடப்பட்டது, “விஜயா என்றால் வெற்றி” “நகரம் என்றால் தெலுங்கில் நகரம் என்று பொருள்”
இதனுடைய மொத்த பரப்பளவு 4,122 ஸ்கொயர் கிலோமீட்டர் களையும் 2011 கணக்கீட்டின்படி 19 லட்சம் 30 ஆயிரத்து 811 மக்கள் தொகையும் கொண்டுள்ள இம் மாவட்டம் 7 எம்எல்ஏ தொகுதிகளும், இரண்டு எம்பி தொகுதிகளும் கொண்டுள்ளது.