இந்தியாவில் தனித்துவமான மிதக்கும் தபால் நிலையம்?

இந்தியாவில் தனித்துவமான மிதக்கும் தபால் நிலையம் உள்ளது.

இந்தியாவில் தான் உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் சேவை நெட்வொர்க் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் தண்ணீரில் மிதக்கும் அஞ்சல் அலுவலகங்கள் இந்தியாவில் உள்ளது.

மிதக்கும் தபால் நிலையம் ஸ்ரீ நகரில் உள்ள டால் ஏரியில் அமைந்துள்ளது,இதனை பார்க்க வரும் சுற்றுலா பார்வையாளர்கள் அங்கு நின்று புகைப்படங்கள் எடுப்பதும் அதேபோல் அங்கு பயன்படுத்தப்படும் ஸ்டாம்ப் மற்றும் கவர்களை வாங்கி செல்வார்கள்.

சுமார் 200 வருடங்களாக இந்த தபால் நிலையம் நடந்து வருகிறது அங்கு டால் ஏரியில் வசிக்கும் மக்களுக்கு போஸ்ட் சேவைகள் டெலிவரி செய்யப்படுகிறது, அங்கு போஸ்ட்மேனாக இருக்கும் Mohd Ismail சுமார் பத்து வருடங்களாக பணியாற்றி வருகிறார் ஒரு நாளைக்கு 100 முதல் 150 லெட்டர்கள் வரை டெலிவரி செய்கிறார்.