இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் கொண்டாடப்படும் வசந்த விழா?

இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் கொண்டாடப்படும் பிரபலமான இந்துக்களின் வசந்த விழா ஹோலியாகும்.

ஹோலி என்பது வண்ணமயமான பொடி திருவிழா (Colour Powder Festival) ஹோலியின் பெயர், “ஹிரண்யகஷப்” அரக்கனின் சகோதிரியான ஹோலிகா என்பதிலிருந்து வந்தது.

அதேபோல் தீமையில் மீது நன்மையின் வெற்றியையும் குறிக்கிறது, இது வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் குளிர்காலத்தின் முடிவையும் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதேபோல் ஹோலி திருவிழாவில் வண்ணமயமான பொடிகளும் அறியப்பட்டாலும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீர் பலூன்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் சண்டைகளில் ஈடுபடுவார்கள்.இதனால் ஹோலியில் தண்ணீரும் மிக முக்கியமாக விளங்குகிறது.

இந்தியாவில் ஹோலி பண்டிகை தேசிய பண்டிகையை தாண்டி, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.