இந்து மதத்தை உருவாக்கியவர் என யாருமில்லை?

இந்து மதம் உலகத்தில் மிகவும் பழமையான மதம் ஆவணங்களின் படி சுமார் கிமு 5 ஆயிரத்து 500 வருடங்களாக இருந்து வருகின்றன.

இந்து மதத்தை உருவாக்கியவர் என யாருமில்லை இது ஒரு வாழ்க்கை முறையாக கருதப்படுவதால் யார் தொடங்கினார்கள் என்பதை அறிய யாரும் விருப்பப்படுவதும் இல்லை.

தற்போதைய காலகட்டத்தில் இந்து மதம் உலகின் மூன்றாவது பெரிய மதமாக உள்ளது, கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் உள்ள மக்கள் இந்து மதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

இந்து மதத்தில் கடவுள்களை பொறுத்தவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் இருக்கிறார்கள். பிரம்மா பிரபஞ்சத்தை படைத்தவராகவும், விஷ்ணு அந்த பிரபஞ்சத்தை பாதுகாப்பவராகவும், சிவன் மீண்டும் ஒரு புது உலகை உருவாக்க அழித்தல் தொழிலை செய்வதாகவும் இந்துக்கள் நம்பி வழிபட்டு வருகின்றனர்.

எந்த கடவுளை வணங்குவது என ஒவ்வொரு இந்துவும் தீர்மானிக்கிறார்கள் இந்து மதத்தில் வேடிக்கையான உண்மை ஒன்று உள்ளது 108 என்ற எண் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான எண்.

இது பூமியிலிருந்து சூரியனின் விட்டம் வரையிலான சூரியனின் தூரத்தின் விகிதமாகும், அதே போல் பூமியிலிருந்து சந்திரனின் விட்டம் வரை சந்திரனின் தூரத்தின் விகிதமாகும்.