உலகில் மிகப் பழமையான நகரம் வாரணாசி?

உலகில் மிகப் பழமையான நகரம் வாரணாசி என்று இந்தியர்களால் நம்ப படுகின்றது.

உலகில் மிகப் பழமையான நகரம் தங்களிடம் இருப்பதாக உலகெங்கிலும் உள்ள சில நாடுகள் கூறுகின்றன, இந்தியாவும் வாரணாசியை மிகப் பழமையான நகரம் என கூறுகின்றது. ஏனென்றால் ஒரு காலத்தில் சிவன் மற்றும் பார்வதி தேவியின் இல்லமாக வாரணாசி இருந்ததாக நம்பப்படுகிறது.

வாரணாசி புனித நகரமாக கூறுகின்றனர், அதேபோல் பனாரஸ் மற்றும் காசி என்று அழைப்பார்கள். இது 3000BC உருவானது என்றும் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது

வாரணாசி நகரம் வரலாற்றை விட பழமையானது, பரம்பரத்தை விட பழமையானது  தனது கடைசி கால நாட்களை கழிக்க மக்கள் வாரணாசிக்கு யாத்திரை செல்கின்றனர்.

அதேபோல் தெய்வீகத் தன்மை அனுபவிக்க பல பக்தர்கள் வாரணாசி யாத்திரை செய்கின்றனர், முதல் முறையாக அந்த நகரத்திற்குள் சென்றால் அங்கு கடைபிடிக்கப்படும் கலாச்சாரம், வரலாறு மற்றும் உணவுகள் அனைவரையும் கவர்ந்திழுக்கும். அதேபோல் கட்டிடக்கலை, சடங்குகள் பிரமிக்க வைக்கும்.