சிறுநீரை கழித்து முதலாளியை காப்பாற்றிய ஜூலியான? யார் இந்த ஜூலியான?

1941 வருடம் WW II  நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெர்மனியின் Air Force பிரிட்டனின் எல்லா இடங்களிலும் குண்டுகளை வீசினார்கள், அதே போல் ஒரு வீட்டின் கூரை மேல் உள்ள குண்டை அணைக்க தன்னுடைய சிறுநீரை கழித்து முதலாளியை காப்பாற்றியது.

இந்த ஜூலியான ஒரு கிரேட் டேன் இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் இதற்காக இந்த நாயை கௌரவித்து ப்ளூ கிராஸ் மெடல் கொடுத்தார்கள்.

இந்த மெடல் பார்த்தீர்கள் என்றால் WW I குதிரைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, அதன் பின் இந்த நாயுக்கும் மிகப்பெரிய விருதான ப்ளூ கிராஸ் மெடலை கொடுத்தார்கள்.

அதோடு இல்லாமல் 1944 வது வருடம் மற்றொரு முறை இந்த ஜூலியான தனது முதலாளியை காப்பாற்றி மற்றொரு முறை மிகப் பெரிய விருதான ப்ளூ கிராஸ் மெடலை பெற்றது.

எப்படி என்றால்? முதலாளிக்கு சொந்தமான ஷூ ஷாப்பில் தீ பற்றி எரியும் பொழுது முதலாளியை எச்சரித்து காப்பாற்றியது, அதனால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் அனைவரும் தப்பினர்.

இரண்டாவது மெடலும் அதனுடைய உருவப்படத்தையும் பிரிஸ்டல் என்ற இடத்தில் கண்டுபிடித்தார்கள், அதனை 2013-ல் செப்டம்பர் மாதம் ஏலம் விடும் பொழுது சுமார் 1100 பவுண்டுக்கு ஏலம் போனது. ஏலம் விடுபவர்கள் இதனை 60 பவுண்டு மட்டுமே போகும் என எதிர்பார்த்தார்கள்.

1100 பவுண்டு என்றால் இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் இவ்வளவு பெரிய விருதை பெற்ற இந்த ஜூலியான 1946 வது வருடம் விஷத்தால் இறந்தது.

முதலாளியின் Post பாக்ஸ் இல் உள்ள ஏதோ ஒரு பொருளை சாப்பிட்டு இறந்தது அதில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னர் தெரிய வந்துள்ளது.