தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பிரபலமான பத்திரிக்கை எது?

இந்தியாவின் பிரபலமான பத்திரிக்கைகளில் மிக முக்கிய இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட செய்தித்தாள் எது?

தமிழ்நாட்டின் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு 1878 ஆம் வருடம் தொடங்கப்பட்டது- தி ஹிந்து தினசரி செய்தித்தாள்.

இது இந்திய ஆங்கில மொழி தினசரி செய்தித்தாளாகும், 1878 ஆம் வருடம் வார இதழாக தொடங்கி 1889 இல் நாளிதழாக மாறியது. இது இந்தியாவின் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பிறகு இந்தியாவில் அதிகம் விநியோகிக்கப்படும் இரண்டாவது ஆங்கில மொழி செய்தித்தாளாகும்.

மார்ச் 2018 நிலவரத்தின்படி  தி இந்து இந்தியாவின் 11 மாநிலங்களில் 21 இடங்களில் இருந்து வெளியிட படுகிறது, ஒரு குறிபிட்டின் படி 15 லட்சத்து 58 ஆயிரத்து 379 பிரதிகளும் சுமார் 22 லட்சத்து 58 ஆயிரம் லட்சம் வாசகர்கள் கொண்டுள்ளது.

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இப்பொழுது 17 மையங்களில் அச்சிடப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர், பெங்களூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொல்கத்தா, அலகாபாத், கோழிக்கோடு மற்றும் பல.

1905 ஆம் வருடம் சுப்ரமணி ஐயர் குடும்பத்தின் மூலமாக எஸ் கஸ்தூரி ரங்க ஐயர் வாங்கியதில் இருந்து, தி இந்து குடும்பத்திற்கு தற்போதைய தலைவர் மாலினி பார்த்தசாரதி இவர் கஸ்தூரி ரங்க ஐயரின் கொள்ளுப்பேத்தி ஆவார்.