தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளில் சாத்தனூர் அணை பரப்பளவு?

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளில் சாத்தனூர் அணை- சாத்தனூர் நீர் தேக்கம் எங்கு உள்ளது எவ்வளவு பரப்பளவு நிலத்தை பயனடைகின்றன.

சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆறு அல்லது பெண்ணையாறு என்று அழைக்கப்படும் ஆற்றின் குறுக்கே தண்டாரம்பட்டு தாலுகாவில் சென்னகேசவ மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளது.

இதில் ஒரு பெரிய முதலை பண்ணை மற்றும் மீன் பண்ணைகள் உள்ளது, சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக அணையில் உள்ளே பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன,  அதேபோல் தோட்டங்களும் திரைப்படத் துறையினரால் பயன்படுத்தப்படுகின்றன.

சாத்தனூர் அணை இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டங்களில் முன்மொழியப்பட்டு இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டன அப்போதைய முதல்வர் கே காமராஜர் தொடங்கி வைத்தார்.

காமராஜர் காலத்தில் திட்டமிடப்பட்ட முக்கிய நீர் பாசன திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் இத்திட்டத்தின் செலவு சுமார் 3.59 கோடி, இதில் முழு மட்டம் 119 அடி 36 மீட்டர் ஆகும்.

இதன் மூலம் தண்டாரம் பட்டு மற்றும் திருவண்ணாமலை தொகுதிகளின் வலது கரை கால்வாய் மூலம் 250 ஏக்கர் நிலமும் அதே போல் இடது கரை கால்வாய் மூலம் 17750 ஏக்கர் நிலமும் பயனடைகின்றன.