முதுமலை தேசிய பூங்கா 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவு?

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான வனவிலங்கு சரணாலயங்கள் முதுமலை தேசிய பூங்கா- முதுமலை புலிகள் காப்பகம்

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் முச்சந்தியில் (tri-junction) 1986 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிர் கோள காப்பகமான (first Biosphere Reserve in India) நீலகிரி உயிர்கோள காப்பகம் ஆகும்.

இது வயநாடுடன் பொதுவான எல்லையை கொண்டுள்ளது, மேற்கில் வனவிலங்கு சரணாலயம்- கேரளா, வடக்கே பந்திப்பூர் புலிகள் காப்பகம்- கர்நாடகா, தெற்கு மற்றும் கிழக்கில் நீலகிரி வடக்கு பிரிவு மற்றும் தென்மேற்கில் கூடலூர் வனப் பிரிவு ஆகியவை இணைந்து புலி போன்ற கொடிய உயிரினங்களுக்கான பெரிய பாதுகாப்பு நிலப்பரப்பை உருவாக்குகின்றன.

முதுமலை என்ற பெயருக்கு “பழமையான மலைத்தொடர்” என்று பொருள் உண்மையில் மேற்கு தொடர்ச்சி மலைகள் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.

பொதுமக்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி இரவில் 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள முக்கியமான தாவரங்கள் மற்றும் பல வகையான விலங்கினங்கள் வாழ்கின்றன, இந்த காப்பகத்தில் 260க்கும் மேற்பட்ட பலவகையான பறவைகள் உள்ளன.

இந்தியாவில் காணப்படும் பறவை இனங்களில் 8% முதுமலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதைகள் பரப்புவதில் ஹான்ஸ் பில்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.