விலங்குகள் தவறு செய்தால் அதற்கு என்று நீதிமன்றம் விசாரணை?

விலங்குகள் தவறு செய்தால் அதற்கு என்று நீதிமன்றம் விசாரணை

இப்பொழுது மனிதர்கள் யாராவது தவறு செய்தால் அவர்களை தண்டிக்க நீதிமன்றமும் ,வழக்கறிஞர்களும் உள்ளனர் ஆனால் விலங்குகள் தவறு செய்தால் நம்மிடம் அதற்கென அமைப்பே இல்லை ஆனால் 13ஆம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை விலங்குகள் தவறு செய்தால் அதற்கு என்று நீதிமன்றம் விசாரணை உள்ளது. நம்ப முடியவில்லையா. ஆனால் இதுதான் உண்மை.

Medieval ஹிஸ்டரி இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது .பன்றி ,நாய், சேவல், பூனை, எலி, பசு, ஊர்வன மற்றும் பல நீதிமன்ற விசாரணை நடந்த பதிவுகள் உள்ளன அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்று மிருகங்கள் மனிதனை காயப்படுத்தினால் அந்த மிருகங்களை கருணைக் கொலை செய்யப் படலாம் ஆனால் Medieval ஹிஸ்டரி இல் தண்டிக்கப் படுவதற்கு முன் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

 

ஏனென்றால் மெடிவல் ஹிஸ்டரியில் இயற்கையை ஆளும் அதிகாரத்தை கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ளார் என்றும் அதில் அடங்கியுள்ள மிருகங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் நம்பப்பட்டன.

PIG Trails

1494 வருடம் ஒரு பன்றி ஒரு குழந்தையை கழுத்தையும் தலையையும் சிதைத்து கொன்றதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது எப்படி என்றால்?

ஜோகன் லேவோஸ்யர்  என்பவர் வழக்கு தொடர்ந்தார் அவருக்கு சொந்தமான  பண்ணையில் கைக்குழந்தையை பன்றி ஒன்று குழந்தையின் முகத்தையும் கழுத்தையும் சிதைத்தது..

விசாரணையின்போது ஈஸ்டர் தினத்தன்று தந்தை கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார் அவரது மனைவியும் வீட்டில் இல்லாததால் குழந்தை அதன் தொட்டியில் தனியாக விடப்பட்டது.

அப்பொழுது பன்றி உள்ளே நுழைந்து குழந்தையின் முகத்தையும் கழுத்தையும் சிதைத்து சாப்பிட்டதால் அந்தப் பன்றி கைது செய்யப்பட்டு பல சாட்சியங்கள் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள் அதன்படி மரக்கட்டையில் தூக்கில் இடப்பட்டு கழுத்தை நெரித்து கொள்ளப்படுவார்.

அதேபோல் நூறு வருடங்களுக்கு முன்பு 1386வருடம் பிரான்சில் உள்ள Falaise ஐகோர்ட்டில் ஒரு குழந்தையை சித்திரவதை செய்து உண்பதற்காக ஒரு பெண் பன்றிக்கு வித்தியாசமான தண்டனை விதிக்கப்பட்டது அதன்படி மனிதனைப்போல் முடியையும், கோட்டையும் அணிவித்து அந்த பெண் பன்றிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதுவும் இல்லாமல் ஒரு சேவலை நீதிமன்ற விசாரணை நடத்தி தண்டிக்கபட்டது எப்படி என்றால்  1474 வது வருடம் the town of Basel, Switzerland நகரத்தில் நீதிமன்றம் ஒன்றில் இயற்கைக்கு மாறாக சேவல் ஒன்று முட்டை இட்டதால் அதற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அதுவுமில்லாமல் மரண தண்டனை விதிப்பவர் அந்த சேவலை வெட்டியதில் இன்னும் மூன்று முட்டைகள் கிடைத்ததாக தகவல் சொல்லப்படுகிறது.

நீங்களெல்லாம் கேட்கலாம் எப்படி சேவல் முட்டை விட்டது என்று ஆனால் Medieval ஹிஸ்டரி நம்பும்படியான ஒரு கதை ஒன்று உள்ளது.

நீங்கள் இன்டர்நெட்டில் தேடி பார்த்தால் basilisk என்ற உயிரினம் உள்ளது அது ஊர்னத்திற்கும் கோழிக்கும் இடையே குறுக்கு வழியில் பிறந்த உயிரினம் தான் basilisk இது எப்படி என்றால் பாம்பு அல்லது தவளை மூலம் செரிவூட்டப்பட்ட சேவல் இடும் முட்டையில் இருந்து பெசலிஸ்ட் உயிரினம் வரும் என்று நம்பப்படுகிறது. இதுதான் தண்டனைக்கான காரணம்.

இதற்கும் கீழே சென்றால் 864 வருடம் ஜெர்மனியில் தேனீக்கள் ஒரு மனிதனை கொட்டிக் கொன்றதால் அதன் கூட்டில் புகையை செலுத்தி மூச்சுத்திணற வைக்க வேண்டும் என்று ஆணையிட்டது அதுவுமில்லாமல் வண்டுகள் பயிர்களை நாசம் செய்ததால் வண்டுகளை அகற்ற உத்தரவிட்டது இன்னும் பல பதிவு செய்யப்பட்ட விலங்குகளின் விசாரணைகள் உள்ளன குதிரைகள் மாடுகள், ஓநாய்கள், பசுக்கள்.