இந்திய முதல் உள்நாட்டு கப்பல் நிறுவனங்கள் உருவாக்கியவர் யார்?
தூத்துக்குடியை சேர்ந்த V O சிதம்பரம் பிள்ளை அவரால் தொடங்கப்பட்ட சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி (SSNC) இந்திய சுதந்திர போராட்டத்தின் போது அமைக்கப்பட்ட முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனங்களில் ஒன்றாகும்.
இது பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் (BISNC) ஏகபோகத்திற்கு எதிராக 1906 ஆம் வருடம் வி ஓ சிதம்பரம் பிள்ளையால் தொடங்கப்பட்டது.
1911 ஆம் வருடம் வரை அந்த நிறுவனம் கலைக்கப்படுவதற்கு முன்பு வரை தூத்துக்குடிக்கும்- கொழும்புக்கும் இடையே கப்பல்களை இயக்கியது
தமிழ்நாட்டின் கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரைக் கொண்ட வி ஓ சிதம்பரம் பிள்ளை, இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகம் அறக்கட்டளையின் பெயரை V O சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை சுதந்திர இயக்கத்தில் அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதத்தில் பெயர் மாற்றியது.