தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலின் சிறப்புகளும் பெருமைகளும்?
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
12ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழனின் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது.
இக்கோயிலில் அமைந்துள்ள பலிபீடம் இந்து மரபுகள் வைணவ மற்றும் சக்தி நடைமுறைகளில் செல்வாக்கை காட்டுகிறது.
2004 ஆம் ஆண்டு UNESCOவால் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்து புராணங்களின்படி ஐராவதேஸ்வரர் கோயில் என்பது இந்திரனின் வெள்ளை யானை.
ஐராவதேஸ்வரர் என்ற பெயர் புராண யானை “ஐராவதம்” என்பதிலிருந்து வந்தது. இது துர்வாச முனிவரின் சாபத்தால் நிறம் மாறியது என்றும் ஐராவதம் சிவபெருமானை வணங்கி கோவில் குளத்தில் குளித்ததால் அதன் நிறம் திரும்பியது என்றும் இதனால் இறைவனுக்கும் ஐராவதேஸ்வரர் என்றும் இக்கோயில் ஐராவதேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுடன் ஒப்பிடும் போது இதன் அளவு மிகவும் எளிமையானதாக இருந்தாலும் இக்கோயிலில் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்துள்ளது, கோவிலின் கருவறை மற்றும் முக்கிய மண்டபங்களை கொண்டுள்ளது.