தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலின் சிறப்புகளும் பெருமைகளும்? Part-2

இந்து புராணங்களின்படி ஐராவதேஸ்வரர் என்ற பெயர் புராண யானை “ஐராவதம்” என்பதிலிருந்து வந்தது. இது துர்வாச முனிவரின் சாபத்தால் நிறம் மாறியது என்றும் ஐராவதம் சிவபெருமானை வணங்கி கோவில் குளத்தில் குளித்ததால் அதன் நிறம் திரும்பியது என்றும் இதனால் இறைவனுக்கும் ஐராவதேஸ்வரர் என்றும் இக்கோயில் ஐராவதேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுடன் ஒப்பிடும் போது இதன் அளவு மிகவும் எளிமையானதாக இருந்தாலும் இக்கோயிலில் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்துள்ளது, கோவிலின் கருவறை மற்றும் முக்கிய மண்டபங்களை கொண்டுள்ளது.