Rapid Transit System என்றால் என்ன? எங்கு இயக்கப்பட்டு வருகிறது?
இந்திய ரயில்வேயின் அரசுக்கு சொந்தமான துணை நிறுவனமானது சென்னை Mass Rapid Transit System எம் ஆர் டி எஸ் இந்தியாவின் சென்னையில் உள்ள உயர்த்தப்பட்ட ரயில் பாதை ஆகும், தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முதல் உயர்த்தப்பட்ட மற்றும் அதிக நீளம் கொண்ட ரயில் பாதையாகும், சுமார் 17 கிலோ மீட்டர் ஆகும் அதேபோல் சென்னை புறநகர் ரயில்வே இருந்து பிரிக்கப்பட்டாலும் இவை இரண்டும் தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை உருவாக்க சுமார் 15 ஆயிரத்து 710 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது இந்த பாதை சென்னை பீச்சில் இருந்து வேளச்சேரி வரை சுமார் 19.34 கிலோமீட்டர் 18 ஸ்டேஷனை கொண்டுள்ளது, இதில் தினமும் பயணிக்கும் நபர்கள் சுமார் ஒரு லட்சம் அதேபோல் இவை முக்கியமான தகவல் தொழில்நுட்ப வர்த்தக நிலையங்களை மட்டும் சுமார் 45 ஆயிரம் பயனாளர்களைக் ஒரு நாளைக்கு கொண்டுள்ளது.
2011- 2012 வருவாய்த் துறையின் படி சுமார் 198 மில்லியன் ரூபாய் வருவாய் செய்துள்ளது, சுமார் 134 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த எம் ஆர் டி எஸ் வரும் ஆண்டுகளில் சென்னையில் மெட்ரோ ரயில் லிமிடெட் உடன் இணைந்து ஒரே நிறுவனமாக ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.