Kollam District structure and facts
கொல்லம் மாவட்டம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களில் ஒன்றாகும் இம் மாவட்டத்தில் பல இயற்கை பண்புகள் உள்ளன இதில் ஒரு நீண்ட கடற்கரை, பெரிய லட்சத்தீவு துறைமுகம் மற்றும் உள்நாட்டு ஏறியான அஷ்டமுடி ஏரியும் கொண்டுள்ளது.
மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன அதில் கல்லடா ஆறும் ஒன்று ஆற்றின் கிழக்கு பகுதி நிலம் கிழக்கு கல்லடா என்றும் மேற்கு பக்கம் உள்ள நிலம் மேற்கு கல்லடா என்றும் அழைக்கப்படுகிறது.
கொல்லத்தின் வரலாற்று பெயர் தேசிங்கநாடு ஆகும், இந்தியாவின் மலபார் கடற்கரையில் அரபிக்கடலின் ஒரு பகுதியான லட்சத்தீவு கடலின் எல்லையில் உள்ள ஒரு பழமையான துறைமுகம் மற்றும் நகரம் ஆகும், கொல்லம் திருவனந்தபுரத்திற்கு வடக்கே சுமார் 44 மைல் தொலைவில் உள்ளது இந்த நகரம் அஷ்டமுடி ஏரி மற்றும் கல்லடா ஆற்றின் கரையில் உள்ளது, இது கொல்லம் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.