Alluri Sitharama Raju District Facts & Information? அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், அல்லூரி மாவட்டம் அதன் சிறப்புகளும் வரலாறும்?
அல்லூரி மாவட்டம் ASR என்றும் அதன் முதல் எழுத்துக்களால் அழைக்கப்படுகிறது,இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இம் மாவட்டத்தின் தலைமையகம் படேருவில் அமைந்துள்ளது, இப்பகுதியில் இருந்து வந்த இந்திய சுதந்திர இயக்கத்தின் புரட்சியாளர் அல்லூரி சீதாராம ராஜுவின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.
இம்மாட்டம் 4 ஏப்ரல் 2022 முதல் நடைமுறைக்கு வந்தது மற்றும் மாநிலத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாக மாறியது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையின் மடியில் உள்ளன.
அதன் மக்கள் தொகை 9 லட்சத்து 53 ஆயிரத்து 963 ஆகும், அதன் பரப்பளவு 12,251 ஸ்கொயர் கிலோமீட்டர் ஆகும், அங்கு 3 எம்எல்ஏ தொகுதிகளும், 1 எம்பி தொகுதிகளும் கொண்டன.