Mullai Periyaru Dam Dispute Against Tamilnadu Part-2

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் கருத்து வேறுபாடுகளும், பிரச்சனைகளும்?-Mullai Periyaru Dam Dispute Against Tamilnadu Part-2

1959 கேரளா அரசின் ஒப்பந்தத்தின்படி தமிழகம் மின்சாரம் தயாரிக்க தொடங்கியது, தலா 35 மெகாவாட் கொண்ட நான்கு அலகுகள் இருந்தன.

அதன் பின் 1960களில் அணையின் பாதுகாப்பு குறித்த தகவல் கவலைகள் எழுப்பட்டன, அணியின் உயரத்தை உயர்த்த தமிழகம் விரும்பியது, ஆனால் கேரளா அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

2000 ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அளவை பரிந்துரைப்பதற்கு மத்திய அரசு ஒரு நிபுணர் குழு அமைத்தது,

2006ல் 152 அடியாக உயர்த்தலாம் என நீதிமன்றம் கூறியது, ஆனால் அதே ஆண்டு மார்ச் மாதம் கேரளா சட்டமன்றம் 2003இல் நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு அழிந்துவரும் அணைகள்  அட்டவணையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதன்படி 136 அடி சேமிப்பு திறனை மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என ஆனது.

2010 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டால் ஏ.எஸ்.ஆனந்த் கமிட்டி அமைக்கப்பட்டது. 2011 நவம்பரில், அந்த பகுதியில் சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதால், நீர்மட்டத்தை 120 அடிக்கு குறைக்க, மத்திய அரசின் தலையீட்டை அரசாங்கம் நாடியது.