Toda Tribes வாழ்க்கை முறைகள்?

தோட பழங்குடியினரை பாரம்பரியமாக Mund என்று அழைக்கப்பட்டன, இவர்களின் குடியிருப்புகள் பீப்பாய் வடிவத்தில் கட்டப்பட்டு மேய்ச்சலில் சரிவுகளில் அமைந்துள்ளன, அவர்கள் வீட்டு எருமைகளை வளர்க்கிறார்கள்.

அவர்களின் பொருளாதாரம் எருமை மாடுகளை அடுப்படியாகவே கொண்டுள்ளது, அதன் பால் பொருட்களை நீலகிரி மலையின் அண்டை மக்களுக்கு வர்த்தகம் செய்கின்றனர்.

அதேபோல் தோடா மக்கள் எருமைகளை புனிதமாக கருதுகின்றனர், இதனால் பல சடங்குகள் நடைபெறுகின்றன. எருமைகளின் வழிபாட்டுக்கான பல கவிதைகள் பாடல்கள் இயற்றப்பட்டு பாடப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் முன்பாக வரை பாரம்பரிய தோடா சமூகத்தில் சகோதரத்துவ (Fraternal) polyandry மிகவும் பொதுவானது அப்படி என்றால் சகோதரர்களுக்கு இடையே அவர்களுடைய மனைவியை பயன்படுத்துவார்கள்.இவை பெண் சிசு கொலை போலவே இந்த நடைமுறையும் இப்போது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

20-ம் நூற்றாண்டின் கடைசி கால கட்டத்தில் சில தோடா மேய்ச்சல் நிலத்தை வெளி ஆட்கள் விவசாயத்திற்காகவும் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு காடு வளர்ப்பதால் தோடா பழங்குடியினர் நிலங்கள் இழந்துள்ளனர்.

இது எருமைமந்தைகளை வெகுவாக குறைப்பதன் மூலம் தோட கலாச்சாரத்தை குறைப்பதிலும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.