டொமேட்டோ கெட்சப் –தக்காளி சாஸ் பல நோயை தீர்க்கும் மருந்தா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் டொமேட்டோ கெட்சப் -தக்காளி சாஸ் 20 வருடங்களுக்கு மேல் ஒரு பல நோயை தீர்க்கும் மருந்தாக இருந்தது.
ஆம் உண்மைதான்!
இப்பொழுது இருக்கின்ற கொரோனா தடுப்பு மருந்து பைசர் கோவாக்சின் போல 1800 களில் டொமேட்டோ கெட்சப் ஒரு மிகப்பெரிய மருந்து.
முதன் முதலில் கெட்சப் என்றால் காளான்,Mushroom மற்றும் ஃபிஷ் அதனை வைத்து தான் தயாரித்தார்கள், அந்த காலத்தில் தக்காளி விஷம் நிறைந்த பொருளாக நினைத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது 1834 வது வருடம் டாக்டர் ஜான் Cook கென்னடி என்பவர் தக்காளியை வைத்து ஆராய்ச்சி செய்ததில் இதனில் டைரியா, காலரா ஜான்டிஸ் மற்றும் Indigestion, வாத நோய் என பல நோயை குணப்படுத்தும் என்று கண்டுபிடித்தார்.
அதனை அந்த காலகட்டத்தில் 1830 ல் அலெக்சாண்டர் மயில் என்ற தொழிலதிபர் அமெரிக்கன் ஹைஜின் பில் என்ற காப்புரிமை பெற்ற மருந்தை விட்டுக் கொண்டிருந்தார்,
அதனைப் பார்த்த டாக்டர் ஜான் Cook கென்னடி மற்றும் அலெக்சாண்டர் மயில் இருவரும் சேர்ந்து டொமேட்டோ Extract- தக்காளியின் சாறு என பெயர் இட்டு திரவ வடிவிலும், மாத்திரை வடிவிலும் விற்க ஆரம்பித்தனர்.
அது புயலாக கிளம்பியது அது எல்லா செய்தித்தாள்களிலும் அதிகமான விளம்பரங்களை வெளிவர தொடங்கினா, அதுவும் இல்லாமல் டொமேட்டோ சாஸ் பயன்படுத்தி குணமடைந்த மக்களின் கதைகளும் பத்திரிகைகளில் வெளியானது
இதனை பார்த்த மத்த நகல் எடுப்பவர்கள் அதனை அப்படியே காப்பி செய்து உண்மையான தன்மையை ஆராய்ச்சி செய்யாமல் டொமேட்டோ சாரி என்ற விளம்பரம் மட்டும் கொண்டு விற்கத் தொடங்கினர், அதுவும் இல்லாமல் இது அனைத்து வித நோயையும் குணப்படுத்தும் என விளம்பரங்கள் செய்தனர்.
இதனை பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் உண்மை தன்மையை உறுதிப்படுத்த பல சோதனைகள் செய்தனர் அதன்பின் கண்டறிந்தது என்னவென்றால் இது எல்லாவித நோயையும் குணப்படுத்தாது என உண்மையை வெளிக் கொண்டு வந்தனர்.
1850 களில் அதன் சாம்ராஜ்யம் முழுவதுமாக முடிவடைந்தது ஆனால் சுமார் 20 வருடங்களாக டொமேட்டோ சாஸ் ஆட்சி செய்து கொண்டு வந்தது.
ஆனால் டாக்டர் ஜான் Cook கென்னடி விஷம் நிறைந்த பொருளிலிருந்து வெளிக் கொண்டு வந்தார் இப்பொழுது இருக்கிற மாடர்ன் சயின்டிஸ்ட்கள் அதில் விட்டமின் சி, பொட்டாசியம், மற்றும் விட்டமின் கே இருக்கிறது என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.
அதுவும் இல்லாமல் இப்பொழுது தக்காளிக் கெட்சப், தக்காளி சூப், தக்காளி பாஸ்தா என பல வகைகளில் தக்காளியை பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்பொழுது வரை அமெரிக்கர்கள் தினமும் தக்காளி சாஸை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒருவேளை இதுவரை தக்காளி விஷயமடைந்த பொருள் ஆக இருந்து என்று நம்பி இருந்தால் நமக்கு இவ்வளவு சுவையான தக்காளி வகைகள் நமக்கு கிடைத்திருக்காது அதனால் ஜான் Cook கென்னடி வரவேற்கிறோம்.