உதயகிரி கோட்டையின் வரலாறு மற்றும் அம்சங்கள்? Part-1

தமிழ்நாட்டில் அமைந்துள்ள உதயகிரி கோட்டையின் வரலாறு மற்றும் அம்சங்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலே நகரில் நாகர்கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் புலியூர்குறிச்சியில் அமைந்துள்ளது.

உதயகிரி கோட்டை முதலில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை 18 ஆம் நூற்றாண்டில்  திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவால் மீண்டும் கட்டப்பட்டது.

சுமார் 90 ஏக்கர் பரப்பளவை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட 260 அடி மலை குன்று கொண்ட உதயகிரி கோட்டையாகும், இந்த கோட்டையில் ஆரம்ப காலகட்டத்தில் திப்பு சுல்தானுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து இந்த கோட்டையில் சில காலம் அடைக்கப்பட்டனர்.

அதன்பின் 1810 ஆம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் ராணுவம் வேலு தம்பி தலைமையில் உள்ள கிளர்ச்சியாளர்களை அடக்க கிழக்கு இந்திய கம்பெனி இந்த கோட்டையை பயன்படுத்தியது.

அதன்பின் ஆங்கிலேயே கிழக்கின் கம்பெனி 19 ஆம் நூற்றாண்டு வரை வீரர்களை நிலை நிறுத்தியது, அதன்பின் துப்பாக்கிகள் பீரங்கி குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு பவுண்டரி இக் கோட்டையில் நிறுவப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட மலை குன்றின் கிரானைட் கற்களால் இக் கோட்டை கட்டப்பட்டுள்ளது.