கைலாசநாதர் கோவிலின் சிறப்பம்சங்கள் பகுதி-2

கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து 75 கிலோமீட்டர்(47 மைல்) தொலைவில் உள்ளது, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள குறிப்பிடத்தக்க கோயில்களில் ஒன்றாகும்.

காஞ்சிபுரத்தில் பிரபலமான மற்ற கோயில்களான ஏகம்பரநாதன், கச்சபேஸ்வரர், காமாட்சியம்மன், குமரக்கோட்டம் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் ஆகும்.

மூன்று “காஞ்சிகளில்” ஒன்று, சிவ காஞ்சி(கைலாசநாதர் கோயில் ), மற்ற இரண்டு காஞ்சிகள் விஷ்ணு காஞ்சி என்றும் ஜெயின் காஞ்சி என்றும் அழைப்பார்கள்.

தற்போது காஞ்சி கைலாசநாதர் கோயில் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.