சீனாவின் மக்கள் தொகை குறைந்து கொண்டே செல்கிறது? பெரும் ஆபத்து ?

சீனாவின் மக்கள் தொகை வருடங்கள் செல்ல செல்ல குறைந்து கொண்டே செல்கிறது ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை வருடங்கள் செல்ல செல்ல மிகவும் அதிகமாக ஏறிக் கொண்டிருக்கிறது ஏன்?

  • 2022 ரிப்போர்டின் படி இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடி சைனாவின் மக்கள் தொகை 142 கோடி
  • இது 2025 இல் இந்தியா 140 கோடி எட்டுமென்றும் ஆனால் சீனா 142 கோடியில் இருந்து 140 கோடியாக குறையும் என்றும் அறிவித்துள்ளது
  • இதே 2050 இல் இந்தியா 160 கோடியை தாண்டும் என்றும் சீனா 140 கோடிக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது

இதனை மூத்த சுகாதார அதிகாரி குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது

அவர்களின் அறிக்கையின்படி 2021-ல் பல மாகாணங்களில் 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு  பிறப்புகள் குறைந்துள்ளது

சீனாவின் சென்ட்ரல் குவான் மாகாணத்தில்  60 ஆண்டுகளில் வெறும் 5 லட்சம் பிறப்புகள் ,இதனை குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் சீனாவின் தெற்கு வாங்கிட்டான் மாகாணத்தில்  ஒரு மில்லியனுக்கும் அதிகமாக புதிய குழந்தை பிறந்துள்ளது.

சீனாவில் இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சியில் பெரிதும் குறைந்தது ஏனென்றால் பல இளைஞர்கள் குழந்தைகளை பெறாமல் இருப்பதை தேர்வு செய்துள்ளனர்.

அதிக செலவு மற்றும் வேலை பாதுகாப்பு காரணங்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது,

ஆனால் கடந்த வருடம் ஒரு பெண் மூன்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சீனா சட்டம் எடுத்து வந்தது, அதுவும் உதவவில்லை.

பல பெண்கள் இந்த சட்டம் மிகவும் தாமதமாக வருகிறது என்று சொல்கின்றனர் ஏனென்றால் தங்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லை ,பாலின சமத்துவம் இல்லை என்று கூறுகிறார்கள்

இதனால்  புதிய தொழில்கள், இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றால் சீனாவிற்கு போர்களின் இழப்பை விட பெரிய இழப்பு ஏற்படும்.