தமிழ்நாட்டின் முதல் தமிழ் செய்தித்தாள் எது? எப்போது துவங்கப்பட்டது?

தமிழ்நாட்டின் முதல் தமிழ் செய்தித்தாள் எது எப்போது துவங்கப்பட்டது?

1881 வருடம் இந்தியர்களுக்கு சொந்தமான முதல் தமிழ் மொழி செய்தித்தாள் சுதேசமித்திரன் ஆகும், இது ஜி சுப்பிரமணிய ஐயர் மூலமாக தொடங்கப்பட்டது.

ஜி சுப்பிரமணிய ஐயர் இதற்கு முன்பாகவே சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பாக 1878 ஆம் வருடம் இப்போது பிரபலமாக உள்ள தி இந்து (The Hindu) செய்தித்தாள் தொடங்கியவர் ஆவார்.

சுதேசமித்திரன் பத்திரிக்கை தி இந்துவின் சகோதரி பத்திரிக்கை என நிறுவப்பட்டது, இதனுடைய Conversion “Friends of self rule” ஆகும். முதலில் இது வார இதழாக இருந்தது, அதன்பின் 1889 ஆம் வருடம் நாளிதழாக மாறியது.

மக்களின் தேசிய உணர்வுகளை தூண்டுவதற்காக சுப்பிரமணிய ஐயரால் பயன்படுத்தப்பட்டது, இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய பிள்ளை, டிவிஎஸ் ஐயர் மற்றும் பலர் பத்திரிகையின் ஆசிரியராகவும் மற்றும் துணை ஆசிரியர்களாகவும் பணியாற்றினர்.

அதன் பின் இந்த செய்தித்தாள் 1915 ஆம் வருடம் கஸ்தூரி குடும்பத்தை சேர்ந்த ஏ ரங்கசாமி அவர்களுக்கு விற்கப்பட்டது, அதன் பின் 1985 ஆம் வருடம் வரை இந்த செய்தித்தாள் வெளிவந்தது அதன் பின் பலவகையாக கலைக்கப்பட்டது.