இந்தியாவின் திருமணம் & அடையாளங்கள்?

இந்தியாவின் மிக முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளில் திருமணம் முக்கியமானது.

மேற்கத்திய நாடுகளில் போல் இல்லாமல் இந்தியாவில் ஒரு பாரம்பரிய முறையை இன்றளவிலும் திருமணங்களில் கடைபிடிக்கின்றனர்.

எந்த ஒரு சீரற்ற நாளிலும் திருமணம் செய்யப்படுவதில்லை அதற்கென ஜோதிடங்களை பார்த்து தேதியை தேர்வு செய்து அதன் பின் மணமகன், மணமகளின் ஜாதகம் பொருந்துமா என சோதிக்கப்படுகிறது அதில் பத்து பொருத்தங்களில் அதிகமான பொருத்தம் உள்ள நபர்களுக்கு திருமணம் செய்யப்படுகிறது.

ஒரு பாரம்பரிய திருமணம் பல மணி நேரம் நீடிக்கும் திருமண நிகழ்விற்கு முன்பு பல சடங்குகள் செய்யப்படும் திருமணத்திற்கு பிறகும் பல சடங்குகள் செய்யப்படுகின்றன.

இந்த பண்புகள் இன்றளவும் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் ஒன்றாகும்.

திருமணமான பெண்களின் அடையாளங்கள்

வளையல்கள், நெற்றியின் மேல் வைக்கும் பொட்டு நெற்றிக்கு மேல் தலையில் வைக்கும் பொட்டு சிந்தூர். இவை அனைத்தும் கல்யாணம் முடிந்த பெண்களின் அடையாளம்.

இது உடலியல் மூலமாகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது, உதாரணமாக சிந்தூர் மஞ்சள்-சுண்ணாம்பு மற்றும் மெட்டல் மெர்குரி கொண்டது, மெட்டல் மெர்குரி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது அது மற்றும் பாலுறவு உந்துதலையும் கொண்டது.

விதவைகள் நெற்றியில் பொட்டு வைக்காததற்கு இது ஒரு உதாரணம்.