Who is Kadaram Kondan?

Who is Kadaram Kondan?  கடாரம் கொண்டான் என்ற பெயர் யாருக்கு அளிக்கப்பட்டது? அவருடைய சிறப்புகள்?

ராஜேந்திர சோழன் I  “ராஜேந்திரன் கிரேட்” என்றும் கங்கைகொண்ட சோழன் என்றும் கடாரம் கொண்டான் என்றும் ராஜேந்திர சோழன் 1 அவர் 1014 முதல் 1044 CE வரை ஆட்சி செய்த சோழப் பேரரசர் ஆவார்.

இவர் கலைகள், வர்த்தகம், சோழப் பேரரசை மிகப்பெரிய அளவில் விரிவு படுத்தவும் அவர் ஆற்றிய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

இவர் தஞ்சாவூரில் முதலாம் ராஜராஜன் மற்றும் வானவன் மகாதேவிக்கு மகனாகப் பிறந்து 1012 ஆம் ஆண்டு முதல் தந்தையுடன் இணைந்து அவரது இறப்பு வரை 1014 வரை அரசு அதிகாரத்தை ஏற்றுக் கொண்டார், இவருடைய வர்த்தகம் இந்திய பெருங்கடல் முழுவதும் இருந்ததால் இவருடைய எல்லையை விரிவுபடுத்த உதவியது.

அதுவும் இல்லாமல் தெற்கு ஆசியாவிற்கு அப்பால் உள்ள பிரதேசத்தையும் கைப்பற்றியுள்ளார் மேலும் கலிங்கம் மற்றும் வேங்கை ராஜ்ஜியத்தை தோற்கடித்து லக்கா தீவுகள் மற்றும் மாலத்தீவுகளை சோழர் ஆட்சியின் கீழ் விரிவு படுத்திய ராஜேந்திரன் பாலவம்சத்தை தோற்கடித்து கங்கைகொண்ட சோழபுரம் நகரை கட்டி எழுப்ப தேவைப்படும் செல்வத்தை கைப்பற்றினார்.

சோழ பேரரசின் தலைநகராகவும் பல நூற்றாண்டுகளாக இந்த நகரத்தில் உள்ள செயற்கை ஏரி அரண்மனையை சுற்றியுள்ள அகழிகள் மற்றும் விரிவான கோட்டைகள் அற்புதமான பிரகதீஸ்வரர் கோயில் என பல குறிப்பிடத்தக்க சிறப்புகள்.

ராஜேந்திரனுக்கு பிறகு அவரது மகன் முதலாம் ராஜாதி ராஜா சுமார் 1044 முதல் 1054 வரை ஆட்சி செய்தார்.