10 Important Facts About Kulakkallvi Thittam?

10 Important Facts About Kulakkallvi Thittam?-குலக்கல்வி திட்டம் என்றால் என்ன யார்? எப்போது அது அழிந்தது?

குலக்கல்வி திட்டம் என்பது பரம்பரை கல்விக் கொள்கை மற்றும் தொடக்க கல்வியின் மாற்றி அமைக்கப்பட்ட திட்டம் அல்லது தொடக்க கல்வியின் புதிய திட்டம் என பெயர் பெற்றது.

மெட்ராஸ் தொடக்க கல்வி திட்டம் சென்னை மாநிலத்தின் INS இந்திய தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தத்தில் ஒரு முயற்சியாகும்.

குலக்கல்வி திட்டம் 1953இல் சி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தலைமையில் தொடங்கப்பட்டது, திட்டத்தின் விதிமுறைகளின் படி தொடக்கப் பள்ளிகளில் இரண்டு Shift Or அமர்வுகளை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு அமர்வில் வழக்கமான கற்பித்தலும் இரண்டாவது அமர்வின் போது மாணவர்கள் தங்கள் பெற்றோரின் தொழில்களை கற்றுக் கொள்வதற்காக வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

இது முதலில் அனைவராலும் ஈர்க்கப்பட்டதாலும் பின்பு பெரிதும் சர்ச்சைக்குரியதாக மாறியது, ஏனென்றால் ஹிந்து தொழில்கள் சாதி அடிப்படையில் ஆனது என்பதால் சாதியை நிலை நிறுத்துவதற்கான ஒரு சாதிய திட்டம் என பலரால் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் எதிர்ப்பு ஏற்பட்டது மற்றும் காங்கிரஸில் உள்ள கருத்து வேறுபாடுகள் இத்திட்டத்தை ஒத்திவைக்க வழி வகுத்தது, மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்படுத்திய அதிருப்தியால் ராஜாஜி முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதன் பின் 1954 ஆம் வருடம் முதல்வர் காமராஜரால் இத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.