10 Interesting News About Therukoothu?

தெருக்கூத்து விவரங்கள்-10 Interesting News About Therukoothu?

தெருக்கூத்து தமிழ் தெரு நாடக வடிவமாகும், தெருக்கூத்து தமிழ்நாடு மற்றும் தமிழ் பேசும் இடங்களான ஸ்ரீலங்காவில் நடக்கின்றன.

தெருக்கூத்து ஒரு பொழுதுபோக்கு மற்றும் சடங்கு மற்றும் சமூக பயிற்றுவிக்கும் ஊடகங்களாக கருதப்படுகின்றன.

தெருக்கூத்து பல முறைகளில் நடக்கின்றது அதில்  இந்துக்களால் போற்றப்படும் மகாபாரதத்தில் உள்ள திரௌபதி என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளது.

இதில் தெருக்கூத்து மற்றும் கட்டைக்கூத்து என இரண்டு முறைகள் உள்ளன இதில் உள்ள வேறுபாடுகள் பல இருந்தாலும் தெருக்கூத்து என்றால் சில கிராமங்களில் ஊர்வலத்தில் நடமாடும் நிகழ்ச்சியை குறிப்பிடும் என்றும், கட்டைக்கூத்து என்பது ஒரு இரவில் மற்றும் ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியாக என கூறப்படுகிறது.

பல தெருக்கூத்து நிகழ்ச்சிகள் மகாபாரதத்தின் திரௌபதி  கதாபாத்திரத்தை முக்கியத்துவம் கொடுத்தும் அதேபோல் ராமாயணம் பற்றிய தெருக்கூத்து நாடகங்கள் மாரியம்மன் திருவிழாக்களில் நடத்தப்படுகின்றன. மேலும் சில நாடகங்களில் உள்ளூர் தெய்வங்களையும் உள்ளடக்கி உள்ளது.

இந்நிகழ்ச்சி தமிழ் நாட்காட்டியில் முதல் மாதம் ஆன சித்திரையில் தொடங்கும் 21 நாள் கோயில் திருவிழாவில் உள்ள ஒரு பகுதியாக தெருக்கூத்து நடத்தப்படுகிறது,திருவிழாவின் நடுப்பகுதியில் தொடங்கி இறுதி நாள் வரை தொடரும்.

தெருக்கூத்து என்ற வார்த்தை தெரு மற்றும் தியேட்டர் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.

கட்டை கூத்து என்ற சொல் “கட்டை சாமான்கள்” எனப்படும் சிறப்பு ஆபரணங்களில் பெயரிலிருந்து பெறப்பட்டது.