Kollam Film Industry and Tourism?- கேரளா அரசின் மதிப்பீட்டின்படி 314 சதுர மைல் நிலம் காடுகளின் கீழ் உள்ளது முக்கியமாக மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தென்மலா, புனலூர் மற்றும் அச்சன்கோயில் வனப் பிரிவுகளின் ஒரு பகுதி உட்பட.
கொல்லத்தின் மேற்கு பகுதி லட்சத்தீவு கடலின் எல்லையாக உள்ளது, கொல்லத்தின் கடற்கரை 23.2 மைல்கள் ஆகும், இது கேரளாவில் மொத்த கடற்கரையில் 6.3 சதவீதம் ஆகும்.
கொல்லம் மாவட்டம் முக்கியமான மீனவ கிராமங்கள் சுமார் 26 கிராமங்கள் மீன்பிடித்தலையே நம்பி வாழ்கின்றன.செரியாழேக்கல், ஆலப்பாட், பண்டாரத்துருத்து, புத்தன்துறை, நீண்டகரை, தங்கசேரி, இரவிபுரம் மற்றும் பரவூர் ஆகியவை முக்கிய மீனவ கிராமங்களாகும்..
கேரளாவின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு (இறால் பிடிப்பில் 60% உட்பட)கொல்லத்தின் பங்களிப்பாகும், இதன் சராசரி மீன் உற்பத்தி 5,275 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் மீன்பிடி துறைமுகத்தில் கிட்டத்தட்ட 3000 இயந்திர மயமாக்கப்பட்ட படகுகள் இயங்குகின்றன.
சுற்றுலாத்தலமான ஜடாயு புவி மையம், பாலருவி அருவி, தென்மலா (காடுகள் மற்றும் நீர்த்தேக்கம்), அகஸ்தியமலை Biosphere Reserve(உயிர்க்கோள காப்பகம்), அஷ்டமுடி (உப்பங்கழி) மற்றும் கொல்லம், திருமுல்லாவரம் மற்றும் தங்கசேரி கடற்கரைகள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள்.