Auroville City/Village is Real? ஆரோவில் என்றால் என்ன? அது ஒரு நகரம் என்றால் நம்புவீர்களா? அதுவும் இல்லாமல் அது ஒரு சோதனை நகரமாகும்
ஆரோவில் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனை நகரமாகும் இது பெரும்பாலும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது, சில பகுதிகள் இந்தியாவின் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் உள்ளது.
இது 1968 ஆம் ஆண்டில் மிரா அல்பாசா (இவரை இந்த அம்மா என்று அழைக்கப்பட்டனர்) மற்றும் கட்டிடக்கலைஞரான ரோகர் ஆங்கர் ஆகியோரால் ஆரோவில் என்ற சோதனை நகரம் உருவாக்கப்பட்டது.
ஆரோவில் என்ற பெயர் பிரெஞ்சு மொழியை கொண்டுள்ளது அரோர் என்றால் விடியலையும் வில்லே என்றால் கிராமம் அல்லது நகரம் என்பதையும் குறிக்கிறது பாண்டிச்சேரியிற்கு வடக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள தரிசு நிலம் இந்நகரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிப்ரவரி 28 ஆம் தேதி 1968 ஆம் ஆண்டு சுமார் 124 நாடுகளின் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடங்கப்பட்டது ஆரோவில் சோதனை நகரம் குறிப்பாக யாருக்கும் சொந்தமானது அல்ல,
ஆரோவில் முழு மனித குலத்திற்கும் சொந்தமானது என குறிப்பிடப்பட்டனர் ஆனால் ஆரோவில் வாழ ஒரு தெய்வீக உணர்வுக்கு விருப்பமான சேவை செய்பவராக இருக்க வேண்டும்.
அதேபோல் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே ஒரு பாலமாக இருக்க விரும்புகிறது, இதனை ஆன்மீக ஆராய்ச்சிகளின் தளமாகவும், மனித ஒற்றுமையின் உயிருள்ள உருவகத்தின் பொருளாகவும் கருதப்படுகிறது இந்த ஆரோவில் சோதனை நகரம்.